ராமநாதபுரம்:ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் பகுதியில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான அரிய வகை கடல் அட்டை கடத்தல் நடப்பதாக கடலோர காவல் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. ரோந்து பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடலோர காவல் படையினரை கண்டதும் கடத்தல்காரர்கள் தப்பி தலைமறைவானதாக கூறப்படுகிறது. ஆத்தங்கரை கடற்பகுதியில் கடத்தலுக்காக வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகளை கடலோர காவல் படையினர் கைப்பற்றினர்.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையின் மதிப்பு ஒரு கோடியே 35 லட்ச ரூபாய் அளவில் இருக்கும் என கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.