தமிழ்நாடு

tamil nadu

மதுபானக் கடைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மீனவர்கள்!

By

Published : Nov 11, 2019, 6:23 PM IST

மதுரை: மதுபானக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் அரசிடம் உரிய விளக்கம் பெறுவதற்கு அரசு வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

madurai

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராயப்பன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ”மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள சின்னப்பள்ளம், மொட்டையன் பண்ணை, அன்னை நகர், தரவை தோப்பு உள்ளிட்ட பகுதி மீனவர்கள் மது அருந்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துள்ளனர். அப்பகுதியில் அரசு டாஸ்மாக் கடையை திறக்க மீனவ கிராமங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், எதிர்ப்பை மீறி அப்பகுதியில் 3 அரசு டாஸ்மாக் கடைகளை அரசு திறந்துள்ளது” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளுக்கென்று வகுத்துள்ள விதியை மீறி இந்த கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிக்கூடம், வழிபாடு தலங்கள் அருகே விதிமீறி திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே விதிமீறி திறக்கப்பட்டுள்ள கடைகளை மூட அலுவலர்களுக்கு உத்தரவிடவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க, அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: மீத்தேன் திட்ட தடை வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details