இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று (அக்.09) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.
இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பாக, வங்கக் கடலோரம் அமைந்துள்ள இராமேஸ்வரம், பாம்பன் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக விசைப்படகுகளை கடலில் செலுத்த அனுமதி அளிக்கும் அரசின் அனுமதிச் சீட்டு வழங்கப்படாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் காரணமாக 800க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் இராமேஸ்வரம், பாம்பன் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.