நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் புதிய மீன்பிடி சட்ட மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல்செய்யவுள்ளது. எல்லை வரையறுப்பது, எல்லை தாண்டும் மீனவர்களுக்கு அபராதத்துடன் சிறைத் தண்டனை விதிப்பது, மீன்பிடிக்கச் செல்லும்போது அனுமதிச்சீட்டு கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்த இந்த மசோதாவுக்கு மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், ஒன்றிய அரசைக் கண்டித்து ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள அனைத்து விசைப்படகுகளிலும் கறுப்புக் கொடி கட்டி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடலில் இறங்கிப் போராட்டம்
மேலும், ராமேஸ்வரம் மீன்பிடி டோக்கன் அலுவலகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் பேரணியாக மீன்பிடித் துறைமுகம் வந்தது மட்டுமின்றி கடலில் இறங்கி எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.