ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெறும் முக்கியமான திருவிழாக்களில் மாசி மகாசிவராத்திரி திருவிழாவும் ஒன்றாகும். இந்தாண்டிற்கான சிவராத்திரி திருவிழா மார்ச் 4ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவின் மூன்றாவது நாளான இன்று(மார்ச்.6) அதிகாலை 3 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு 4 மணிவரையிலும் ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து காலை 6 மணியளவில் ராமநாதசுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், பர்வதவர்தினி அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் எழுந்தருளினர். இதனையொட்டி, காலை 6 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை சாத்தப்பட்டு சாமி தரிசனம் செய்வதற்கோ, 22 தீர்த்த கிணறுகளில் நீராடுவதற்கோ அனுமதிக்கப்படவில்லை.