தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரம் இளைஞர் கொலை வழக்கு: ட்விட்டரில் பதிவிட்ட எஸ்.பி!

ராமநாதபுரம் இளைஞர் கொலை தொடர்பாக வதந்திகளையும், பொய் தகவலையும் பரப்ப வேண்டாம் எஸ்.பி வருண்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

By

Published : Sep 2, 2020, 2:05 PM IST

எஸ்.பி வருண்குமார்
எஸ்.பி வருண்குமார்

ராமநாதபுரம் அருகேயுள்ள கள்ளர் தெருவைச் சேர்ந்தவர்கள் அருண் பிரகாஷ் (23), யோகேஷ்வரன் இவர்கள் இருவரும் தெருமுனையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, நான்கு இருசக்கர வாகனத்தில் வந்த 12 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், திடீரென இருவரையும் பயங்கரமான ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளனர்.

இதில், பலத்த காயமடைந்த அருண் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யோகேஷ்வரன் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், காயமடைந்த யோகேஷ்வரனை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அருண் பிரகாஷ் உடல் உடற்கூறாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேணிக்கரை காவல்துறையினர் 12 பேர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஸ்பி வெளியிட்ட ட்விட்டர் பதிவு!

இதையும் படிங்க:இந்து முன்னணி, பாஜகவினர் சாலை மறியல்!

நேற்று (செப்.01) உயிரிழந்த அருண் பிரகாஷ்யின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்களுடன் இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகள் இணைந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவர் என்று வாக்குறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு அருண் பிரகாஷ்யின் உடலை பெற்று அடக்கம் செய்தனர்.

இச்சம்பவத்தை மதப் பிரச்சனையாக மாற்ற பல முயற்சிகள் எடுக்கப்பட்டதோடு, அது குறித்த தவறான தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவி வந்தது. இந்நிலையில் அருண் பிரசாத் படுகொலை சம்பவத்தில் சாகுல் அமீது, முகமது ரியாஸ், காமாட்சி, சுரேஷ் ஆகிய நான்கு பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் லெப்ட்ஷேக், சரவணன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடந்து வருகிறது. இது தொடர்பாக எஸ்.பி வருண்குமார் தனது ட்விட்டரில், “அருண் பிரகாஷ் கொலையானது இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம். மதம் சார்ந்த பிரச்சனை ஏதுமில்லை; காவல்துறையானது நேர்மையாக விசாரணை நடத்தி, குற்றவாளிகள் அனைவரும் கைது செய்வோம். எனவே, வதந்திகளையும், பொய் செய்திகளை பரப்ப வேண்டாம்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details