ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் வனவர் மகேந்திரன், வனக்காப்பாளர் பிரபு, வேட்டைத் தடுப்புக் காவலர்கள் இன்று (மார்ச் 22) காலை மண்டபம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சேது நகர், மண்டபம் பகுதியைச் சேர்ந்த ரம்ஜான் அலிகானிடமிருந்து 25 கிலோ எடையுள்ள, பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளைப் பறிமுதல்செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.