ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் நேற்று ராமநாதபுரம் டிசிபி அலுவலகத்தில் நில மோசடி தொடர்பான விசாரணைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு தனக்கு நில மோசடி வழக்கில் பிரச்னை வராமல் இருக்க டிசிபி அலுவலகத்தில் பணிபுரியும் காவலர் தர்மர் என்பவரிடம் லஞ்சம் கொடுத்துள்ளார்.
ரியல் எஸ்டேட் அதிபரிடம் லஞ்சம் வாங்கிய காவலர் பணியிடம் மாற்றம்! - bribery case ramanathapuram sp transfered police
ராமநாதபுரம்: சாயல்குடியில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் லஞ்சம் வாங்கிய காவலரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அவர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த காட்சியை ஜீப்பில் இருந்தபடியே சக காவலர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்த தகவல் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அருண்குமாருக்குச் சென்றது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு 8 மணியளவில் தர்மரை மாவட்ட ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தவிட்டார். நில மோசடி செய்வோருக்கு உதவ காவலர் ஒருவர் லஞ்சம் பெற்றுக் கொண்ட வீடியோ மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: காவல் துறையினர் பொறுப்புணர்வுக்கு பொதுமக்கள் பாராட்டு