தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் பலத்த மழை - மக்கள் மகிழ்ச்சி - Ramanathapuram showers made people happy

ராமநாதபுரம்: ஆலந்தூர், திருவாடனை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Ramanathapuram showers

By

Published : Sep 2, 2019, 10:27 AM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்கிறது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. மேலும், நண்பகல் நேரங்களில் வெளியே நடமாடுவதை மக்கள் பெரும்பாலும் தவிர்த்து வந்தனர்.

ராமநாதபுரத்தில் கொட்டித்தீர்த்த மழை

இந்நிலையில் நேற்று மாலை திடீரென ராமநாதபுரம் நகர் பகுதி, ஆர்எஸ் மங்கலம், ஆலந்தூர், திருவாடனை உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்து மழை வெப்பத்தை தணித்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details