தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலாம் நினைவிடம் அருகே மணல் சிற்பம் மூலம் கொரோனா விழிப்புணர்வு - school teacher corona sand art

ராமாநாதபுரம்: கலாம் நினைவிடம் அருகே கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து மணல் சிற்பத்தை செய்து அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.

ramanathapuram-school-teacher-did-corona-awareness-by-sand-art
ஆசிரியர் ஒருவர் மணல் சிற்பம் மூலம் கரோனா விழிப்புணர்வு

By

Published : Mar 16, 2020, 8:42 AM IST

Updated : Mar 16, 2020, 9:06 AM IST

உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.

தற்போதுவரை இந்தியாவில் 107 பேர் அந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் வைக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இது மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக அரசு முழுவீச்சில் செயல்பட்டுவருகிறது. கொரோனா வைரஸ் அச்சத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுவருகின்றன. மேலும் திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விழிப்புணர்வை அரசும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சரவணன் என்ற அரசுப்பள்ளி ஆசிரியர் கொரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்பு அப்துல் கலாம் நினைவிடம் அமைந்துள்ள பகுதியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மணல் சிற்பங்களாக வடித்தார்.

இதில் தமிழர்களின் பண்பாடான வணக்கம் சொல்ல வேண்டும் கைகுலுக்கக் கூடாது. வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து வகையான மணல் சிற்பங்களைச் செய்து பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தினார்.

ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்கள் இந்த மணல் சிற்பத்தை பார்வையிட்டுச் சென்றனர். இது குறித்து சரவணனிடம் கேட்டபோது, "மாவட்ட ஆட்சியரின் முயற்சியாலும் இந்தக் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மணல் சிற்பம் மூலம் அப்துல் கலாம் நினைவிடம் முன்பாகச் செய்ய முடிந்தது" எனத் தெரிவித்தார்.

வணக்கம் சொல்வது குறித்த மணல் ஓவியம்

இதையும் படிங்க:கொரோனா பீதி: கோழியிலிருந்து மீனுக்கு படையெடுக்கும் மக்கள்

Last Updated : Mar 16, 2020, 9:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details