தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் 100 நாள் வேலை கேட்டு பெண்கள் தர்ணா

ராமநாதபுரத்தில் 100 நாள் திட்டத்தின் மூலம் வேலை வழங்கவில்லை என பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுர பெண்கள் 100 நாள் வேலை கேட்டு தர்ணா போராட்டம்
ராமநாதபுர பெண்கள் 100 நாள் வேலை கேட்டு தர்ணா போராட்டம்

By

Published : Jun 10, 2021, 4:22 PM IST

ராமநாதபுரம் வயலூர், பெருங்களுர் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், வயலூர், பெருங்களூர் கிராம மக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் வேலை வழங்க மறுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராமநாதபுர பெண்கள் 100 நாள் வேலை கேட்டு தர்ணா போராட்டம்

இதனால் மனவேதனை அடைந்த கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர், , ஊரக வளர்ச்சி அலுவலர் என அரசு அலுவலர்களிடம் புகார் அளித்தனர். எனினும் அவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை.

இதனால் விரக்தி அடைந்த கிராம மக்கள், வேலை வழங்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details