தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் 70 வயது மூதாட்டிக்கு கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 22ஆக உயர்வு - Ramanathapuram old lady corona

ராமநாதபுரம்: கீழக்கரையைச் சேர்ந்த 70 வயது மூதாட்டிக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.

ramanathapuram
ramanathapuram

By

Published : May 6, 2020, 7:49 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து வரும் சூழலில், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்த 70 வயது மூதாட்டிக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அவர் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். கீழக்கரை பகுதி கட்டுப்பாட்டு பகுதிக்குள் கொண்டுவரப்பட்டு அங்கு தீவர சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மூதாட்டிக்கு இன்று கரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில், உச்சிப்புளியைச் சேர்ந்த செவிலி ஒருவர் இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பினார். அதனால் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவமனையில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: நெருக்கடியான நேரத்தில் விலையேற்ற நடவடிக்கை கொடூரமானது - சிதம்பரம்

ABOUT THE AUTHOR

...view details