ராமநாதபுரம் மாவட்டம் சிகில் ராஜாவிதி வம்பன் சந்து பகுதியில் ஒரு பழைய கட்டடத்தை இடித்து புதிதாக கட்டடம் கட்ட தூண் எழுப்பும் வேலை நடைபெற்றுவருகிறது. அந்தப் பழைய கட்டடத்தின் சுவர் ஒன்று முழுவதும் இடிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், அங்கு கட்டட வேலையில் ஈடுபட்ட பால்சாமி (65), பாலசுப்பிரமணி (60) ஆகிய இருவரும் சிறிது நேரம் நிழலுக்காக சுவற்றின் ஓரம் ஒதுங்கி உள்ளனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக பழைய சுவர் இருவர் மீதும் சாய்ந்தது. அதில், இடிபாடுகளுக்கிடையே சிக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற கட்டட தொழிலாளிகள் உடனடியாகக் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.