ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த ஐந்து நாள்களுக்கு மேலாக கனமழை பெய்ததால், பல்வேறு பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொது மக்களின் இயல்பு வாழக்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய எம்.பி., - இராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம்: கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாவஸ்கனி எம்.பி., ஆய்வு செய்து பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இராமநாதபுரம் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்.பி நாவல் கனி ஆய்வு செய்து நிவாரண உதவி.
இந்நிலையில், சாயல்குடி பகுதியில் கன மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி ஆய்வு செய்தார். மேலும், மழையால் சேதமடைந்த சாலைகள், தண்ணீர் தேங்கியுள்ள இடங்களை சீரமைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருள்களை வழங்கினார்.
இதையும் படிங்க...கிருஷ்ணகிரியில் யானை மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து