தமிழ்நாடு

tamil nadu

ராமநாதபுரத்தில் மேலும் 117 பேருக்கு கரோனா தொற்று உறுதி

By

Published : Jul 3, 2020, 9:51 AM IST

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மேலும் 117 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1069 ஆக அதிகரித்துள்ளது.

Ramanathapuram Latest Corona UPdate
Ramanathapuram Latest Corona UPdate

ராமநாதபுரத்தில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாள்களாகவே தினசரி ராமநாதபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம், பரமக்குடி, சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி என மூன்று இடங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போதுவரை ராமநாதபுரத்தில் 956 பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர், அவரின் உதவியாளர், மகன் என 117 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1069 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 265 பேர் மட்டுமே குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை குறிப்பாக பரமக்குடி அதனை சுற்றியுள்ள பகுதிகள், கீழக்கரை பகுதியில் வைரஸ் தொற்று வேகம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் இணைந்து அவற்றின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆவின் பால் விற்பனையில் சாதனையா? பால் முகவர்கள் சங்கம் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details