ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் மருத்துவர் மலையரசியை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், மருத்துவமனையிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர், உயிர்காக்கும் மருந்துகள் போன்றவற்றை தனியார் மருத்துவமனைக்கு திருடிச் செல்லும் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது.
மேலும், நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதை கண்டித்தும், ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டும் போராட்டம் நடைபெற்றது.