ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு மருத்துவமனையில் தலைமை மருந்தாளுனராக பணியாற்றுபவர் முத்துசாமி(48). இவர் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு முடிந்த உடலை இலவச அமரர் ஊர்தியில் அனுப்பி வைப்பதால், மருத்துவமனைக்கு வெளியே தனியார் அமரர் ஊர்தி வைத்து தொழில் நடத்தும், கடலாடி தாலுகா பெரியகுளத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற சுரேந்திரனுக்கும், முத்துசாமிக்கும் சில நாட்களாக முன்பகை இருந்துள்ளது.
தலைமை மருந்தாளுனரை தாக்கியவர் மீது வழக்கு! - ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்
கமுதி அரசு மருத்துவமனையின் தலைமை மருந்தாளுனரை முன்பகை காரணமாக தாக்கியவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
வழக்கு பதிவு
இந்நிலையில், நேற்றிரவு (மே.14) அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்து வந்த மருந்தாளுனர் முத்துசாமியை இரும்புக் கம்பியால் சுரேஷ் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். இதில் காயமடைந்த முத்துசாமி கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கமுதி காவல் நிலையத்தில் முத்துச்சாமி கொடுத்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுரேஷை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆட்சிக்கு வந்து என்ன செய்தோம் - முதலமைச்சர் ஸ்டாலின் உரை!