தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதுகுளத்தூர், அரசுப் பள்ளி ஆசிரியர் தீக்குளிப்பு - ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை

ராமநாதபுரத்தில் உடல்நலக் குறைவு காரணமாக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை வேண்டாம், no suicide
தற்கொலை வேண்டாம்

By

Published : Aug 28, 2021, 8:17 PM IST

ராமநாதபுரம்:முதுகுளத்தூர் அருகே தேரிருவேலியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (42). இவர் இளங்காக்கூர் தொடக்கப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுபாஷினி, காக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியராக உள்ளார்.

ரயில் பாதையில் தீக்குளிப்பு

நீண்ட நாள்களாக, சுரேஷ் குமார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தனது ராமநாதபுரம் தேவேந்திர நகரில் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து, அவரின் பெற்றோர் வீட்டின் அருகே உள்ல ரயில் பாதைக்குச் சென்று தனது உடலில் பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை, ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியில் அவர் உயிரிழந்தார்.

ராமநாதபுரம் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பாம்பன் ரயில் பாலத்தில் 55 நாள்களுக்குப் பிறகு ரயில் சோதனை ஓட்டம்!

ABOUT THE AUTHOR

...view details