ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே பாப்பாங்குளம் கிராமத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற தனிப்படை காவல் துறையினர் பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது கழிவுநீர் தொட்டியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 40 கிலோ கஞ்சாவினை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.