ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் லிங்கவேல், ஜெயராஜ் ஆகியோர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ராமேஸ்வரம் நடுத்தெருவில் உள்ள தேநீர் கடையில் தேநீர் தூளை திடீரென சோதனை செய்தனர். அதில் கலப்படம் இருப்பதை கண்டறிந்த அலுவலர்கள் தேநீர் தூள்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
மேலும் சல்லிமலை பகுதியில் பாண்டி என்பவரது கடையில் வைத்திருந்த போதை பாக்கு, தடை செய்யப்பட்ட நெகிழியிலான தேநீர் கப்புகளை பறிமுதல் செய்து ஆயிரக்கணக்கில் அபராதம் விதித்து, மேலும் இதுபோன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர்.
இன்று மட்டும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கலப்பட பொருட்கள், தடை செய்யப்பட்ட போதை பொருள், நெகிழி கப்கள் பறிமுதல் செய்யப்படுள்ளன.
இதையும் படிங்க: ரசாயன கழிவு நீர் கலந்து மீன்கள் உயிரிழப்பு