இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் "ராமநாதபுரம் திணைக்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் திலீபன், சிவா, ரஞ்சித், முத்துக்குமார், ரவிக்குமார், முனீஸ்வரன் ஆகிய ஆறு மீனவர்களும் வறுமை காரணமாக கடந்தாண்டு மீன்பிடித் தொழிலுக்காக துபாய்க்குச் சென்றனர்.
துபாயில் சிக்கித்தவிக்கும் ராமநாதபுரம் மீனவர்கள் 6 பேரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை - tamilnadu fishermen stuck in dubai
ராமநாதபுரம்: துபாய்க்கு வேலைக்குச் சென்று மாட்டிக்கொண்ட ராமநாதபுரம் மீனவர்கள் ஆறு பேரை மீட்கக்கோரி அவர்களது குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

request-to-rescue-6-ramanathapuram-fishermen
அங்கு சென்ற அவர்களிடமிருந்து ஊரடங்கிற்குப் பின் மூன்று மாதங்களாக எந்த ஒரு தகவலும் வரவில்லை. பணிக்கு அமர்த்தியவர்களிடம் தொடர்புகொண்டால் சரியாகப் பதில் அளிக்கவில்லை. ஆகவே, அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடலில் தத்தளித்த நான்கு மீனவர்கள் மீட்பு!