தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீன்வளத்துறையைக் கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் : இரட்டை மடி, சுருக்கு மடி வலைகளைத் தடுக்காமல் இருக்கும் மீன்வளத் துறையை கண்டித்து காதில் பூச்சுற்றி தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Ramanathapuram fishermen association Protest
Ramanathapuram fishermen association Protest

By

Published : Sep 24, 2020, 1:35 AM IST

தனுஷ்கோடி முதல் எஸ்.பி.பட்டினம் வரையிலான கடல்பகுதியில் விசைப்படகு மீனவர்கள் கரையோர மீன்பிடிப்பு வேலைகள் செய்வதால் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே இதைத் தடுக்கக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பாக காதில் பூச்சுற்றும் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலர் கருணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், ராமேஸ்வரம், மண்டபம் கடல் பகுதியில் போலி ஆர்.சி புத்தகங்களை பயன்படுத்தி மீன்பிடிக்கும் படகுகளைத் தடுக்க ஆய்வு மேற்கொள்ள வேண்டும், தேவிப்பட்டினம் கடல் பகுதியில் கரை வலை மீன் பிடிப்பு பணி பாதிப்பின்றி நடைபெற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்கு பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பதைக் கண்டித்தும் இப்போராட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர்.

இதனையடுத்து, மீன்வளத்துறை துணை இயக்குனர் அவர்கள் அனைவரது மனுக்களையும் பெற்று அனைத்துக் கோரிக்கைகள் மீதும் கண்டிப்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details