தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - All India Agricultural Workers Union

ராமநாதபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

All India Agricultural Workers Union
Ramanathapuram farmers union

By

Published : Jun 5, 2020, 3:23 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, முதுகுளத்தூர், கமுதி ஆகிய பகுதிகளில் உள்ள தாலுக்கா அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது கரோனா காலங்களில் ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாயை 6 மாத காலத்திற்கு வழங்க வேண்டும், நூறு நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும், மின்சாரத்தை தனியார் மயமாக்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், மாவட்ட செயலாளர் கலையரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

இதையும் படிங்க:ஜல் ஜீவன் திட்டத்தைச் செயல்படுத்துமாறு முதலமைச்சருக்கு மத்திய அமைச்சர் கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details