ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி நேற்று (ஜன.11) விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டார். அப்போது அவர்கள் 117 கிராமங்களுக்கு நிலுவையிலுள்ள காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் ரூபாலாவை சந்தித்த நவாஸ்கனி, 117 கிராமங்களுக்கு மகசூல் இழப்பு பயிர் காப்பீட்டு தொகையானது 25 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது, மீதமுள்ள 75 விழுக்காடு காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க காப்பீட்டு நிறுவனத்தை வலியுறுத்துமாறு கோரிக்கை வைத்திருந்தார்.