ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் முக்கிய ஆவணங்கள், கணிணி தொடர்பான பொருட்கள், நாற்காலிகள் ஆகியவை எரிந்து நாசமடைந்தன.
மாவட்ட கல்வி அலுவலகத்தில் தீ: முக்கிய ஆவணங்கள் நாசம் - தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் சேதம்
ராமநாதபுரம்: மாவட்ட கல்வித் துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள், பொருட்கள் எரிந்து நாசமாகின.
Ramanathapuram District Education Office Fire: important documents Damage
மேலும், இரவு நேர காவலாளி துரிதமாக செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. அதிகாலை வேளையில் அலுவலகத்தினுள் இருந்து புகை வருவதை கண்ட இரவு நேர காவலாளி விரைந்து செயல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளேயே இருந்த தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அலுவலக கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து வேகமாக பரவிய தீயினை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.