தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமேஸ்வரம் சுற்றுலா மேம்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு - தனுஷ்கோடி

ராமேஸ்வரம் ஓலைகுடா, குந்துகால், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, அரியமான் பகுதிகளில், சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று(ஜூலை 24) கள ஆய்வு மேற்கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா

By

Published : Jul 24, 2021, 8:36 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் தேசிய அளவில் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்குள்ள பழமையும் சிறப்பும் வாய்ந்த ராமநாதசுவாமி கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநில சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வந்து செல்வர்.

அத்துடன் ராமேஸ்வரத்தில் உள்ள தனுஷ்கோடி, அரிச்சல்முனை, அரியமான் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகை தருவர்.

இந்த நிலையில், இன்று(ஜூலை 24) மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ராமேஸ்வரம் ஓலைகுடா, குந்துகால் , தனுஷ்கோடி , அரிச்சல்முனை, அரியமான் பகுதிகளில் சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். அத்துடன் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:பாம்பன் பாலம்: பொறியியல் பிரமாண்டம்!

ABOUT THE AUTHOR

...view details