ராமநாதபுரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 16ஆக அதிகரித்துள்ளது. ராமநாதபுரம், கீழக்கரை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன், எட்டு வயது சிறுமி உள்பட மூவருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, ராமநாதபுரத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55லிருந்து 58ஆக தற்போது உயர்ந்துள்ளது. இவர்களில் 29 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், எஞ்சிய 28 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.