ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை, பத்மராஜம் கல்விக் குழு சார்பில் வெற்றி மேல் வெற்றி என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கலந்துகொண்டார்.
மரம் வளர்க்க மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை!
ராமநாதபுரம்: பள்ளி மாணவர்கள் குறைந்தபட்சம் ஐந்து மரக் கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று அம்மாவாட்ட ஆட்சியர் மாணவர்களிடம் கேட்டுகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "ஒழுக்கமும், கடின உழைப்பும்தான் வெற்றிக்கு வழிவகுக்கும். நீங்கள் வெற்றி பெற இந்த இரண்டையும் பின்பற்ற வேண்டியது அவசியம். அதேபோல் தன்னிலை அறிந்து சமூகப் பொறுப்புடன் இருக்க வேண்டும். மழை நீர் சேமிப்புடன், வீட்டுக்கு குறைந்தபட்சம் ஐந்து மரங்களை நட்டு அதை பராமரித்து வளர்க்க வேண்டும்" என்று கேட்டுகொண்டார்.
இதில் நான்காம் தமிழ்ச் சங்க குமரன் சேதுபதி, செந்தமிழ் கல்லூரி செயலர் லட்சுமி குமரன், மாவட்டக் கல்வி அலுவலர்(பொறுப்பு) முத்துச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.