தேசிய குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, டெல்லி தேசிய பாலபவனில் கடந்த 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நாடு முழுவதுமிருந்து 850 குழந்தைகள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ராமநாதபுரம் மாவட்ட ஜவஹர் சிறுவர் மன்றத்தின் சார்பில் திட்ட அலுவலர், மு. லோக சுப்பிரமணியன் தலைமையில் குழந்தைகள் நிவேதாஸ்ரீ, பிரஜின் குமார், கேசவ நித்தீஸ், சுதர்சன், எஸ்தர் அந்தோணி, யோகித், புவனேஷ், முகிலன், ஹரிஸ், சிலம்பொலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் அவர்கள், தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், மரக்காலாட்டம் ஆகியவற்றை நடத்திக் காண்பித்து, பாராட்டு பெற்றனர். டெல்லி தேசிய குழந்தைகள் தின விழாவில் பங்கேற்று திரும்பிய குழந்தைகளை ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ், பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.