தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுடன் ஆட்சியர் ஆலோசனை - ராமநாதபுரம் செய்திகள்

ராமநாதபுரம்: வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுடன் நடமாடும் வாகனங்களில் விற்பனை செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று (மே.30) நடைபெற்றது.

ராமநாதபுரம் சார் ஆட்சியர் அலுவலக
வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் ஆட்சியர் ஆலோசனை

By

Published : May 30, 2021, 8:56 PM IST

ராமநாதபுரம் சார் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று (மே.30) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்கள், தங்கு தடையின்றி குடியிருப்புப் பகுதிகளுக்கே நேரடியாக கொண்டு சென்று விற்பனை செய்தல் தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்ததாவது, 'ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 24 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு வருகிற ஜூன் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வார கால முழு ஊரடங்கின்போது, பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் அனைத்தும் தோட்டக்கலைத் துறை ஒருங்கிணைப்பில், நடமாடும் விற்பனை வாகனங்களுக்கு முறையே அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, குடியிருப்புப் பகுதிகளிலேயே நேரடியாக விற்பனை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தற்போது மளிகைப் பொருட்களையும் நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலமாக குடியிருப்புப் பகுதிகளுக்கு நேரடியாக கொண்டு சென்று விற்பனை செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மொத்த விற்பனையாளர்கள் நலனுக்காக வெளிமாவட்டங்களுக்குச் சென்று சிரமமின்றி மளிகைப் பொருட்கள் கொள்முதல் செய்திடவும், சில்லறை விற்பனையாளர்கள் நடமாடும் விற்பனை வாகனம் மூலம் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்வதற்கும் முறையான முன் அனுமதிச்சீட்டு வழங்கிட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு நகராட்சி ஆணையரிடமும், பேரூராட்சி செயல் அலுவலரிடமும், ஊராட்சி ஒன்றிய ஆணையரிடமும் வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் தேவையான அளவு அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

வாகனங்களில் விற்பனை செய்பவர்கள் கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றிட வேண்டும்' என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், கூடுதல் ஆட்சியர் பிரதீப்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி, சார் ஆட்சியர் சுகபுத்ரா, பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் தங்கவேல் உட்பட அரசு அலுவலர்கள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:'ஈடுசெய்ய முடியாத இழப்பு' - மைதிலி சிவராமன் மறைவிற்கு ஜோதிமணி இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details