தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர் காயம்!

ராமநாதபுரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

Ramanathapuram at katchatheevu lanka navy opened fire cause fisherman injured
ராமேஸ்வரம் மீனவர்கள்

By

Published : Feb 20, 2020, 1:03 PM IST

Updated : Feb 20, 2020, 3:04 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து நேற்று (பிப். 19) 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்தனர். அதுமட்டுமல்லாமல், கிங்ஸ்டன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் இருந்த மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

ராமேஸ்வரம் மீனவர்கள்

இதில், ஜேசு என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்ட சக மீனவர்கள், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அண்மையில் ராமேஸ்வரம் வந்திருந்த மத்திய கப்பல் போக்குவரத்துத் துறையின் இணை அமைச்சர், மீனவர்களை பாதுகாத்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படாமல் சுமூகமாக மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார். ஆனால், அவர் கூறி இரண்டு நாள்களே ஆன நிலையில், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது தமிழ்நாடு மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீனவ சங்க தலைவர் தேவதாஸ் பேட்டி

இதையும் படிங்க:திரேஸ்புரத்தில் பக்கிள் கால்வாய் கழிவால் மீனவர்கள் அவதி

Last Updated : Feb 20, 2020, 3:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details