ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் அறிவுறுத்தலின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுடன் இணைந்து காவல்துறை சார்பில் 'கலவர ஒத்திகை' நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில், இன்று (பிப்.6) கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தில் ஆயுதப்படை காவலர்கள், பொதுமக்களை வைத்து 'கலவர ஒத்திகை' நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக காவலர்கள் இரண்டு குழுவாகப் பிரிந்து, கலவரக்காரர்கள் போல் கையில் அரிவாள், உருட்டு கட்டை, தண்ணீர் பாட்டில் போன்றவற்றை ஏந்தியபடி ஒரு புறமும், மற்றொரு புறம் சீருடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காகவும் நிறுத்தப்பட்டனர்.