தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 10, 2021, 9:46 AM IST

ETV Bharat / state

258 குக்கிராமங்கள், 56 வார்டுகளில் உள்ள மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டாச்சு

ராமநாதபுரத்தில் 258 குக்கிராமங்கள், 56 வார்டுகளில் உள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ramanathapuram
ramanathapuram

ராமநாதபுரம்:தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த மூன்று வாரங்களில், வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதில் 1,44,900 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மேலும், தடுப்பூசி செலுத்தி கொண்டோர் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் இந்த வாரமும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில் 80 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) காமாட்சி கணேசன் தெரிவித்தார்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில், "ராமநாதபுர மாவட்டத்தில் மொத்தமாக 429 பஞ்சாயத்துகள் உள்ளன. அதில் 2306 குக்கிராமங்கள் உள்ளன. அவற்றின் 258 குக்கிராமங்களில் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்துகளில் உள்ள 229 வார்டுகளில் 56 வார்டுகளில் 100 விழுக்காடு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அனைவரும் தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக விரைவில் மாறும்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் புதிதாக 1,432 பேருக்கு கரோனா

ABOUT THE AUTHOR

...view details