பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், ராமநாதபுரம் மாவட்டம் 98.48% பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. ராமநாதபுரத்தில் தேர்வு எழுதிய 16623 மாணவர்களில் 16370 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
ஒட்டுமொத்தமாக 98.26 சதவீதம் பெற்று மாநில அளவில் ராமநாதபுரம் அரசு பள்ளியில் முதல் இடத்தை பிடித்து சாதனை நிகழ்த்தியது. அரசு பள்ளிகளில் 131 பள்ளிகளில் 94 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை காட்டிவுள்ளனர். இதுகுறித்து ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் விசுவாசம் கூறிய பொழுது,
பல தனியார் பள்ளிகளால் நிராகரிக்கப்பட்ட மாணவர்களை தங்களின் பள்ளியில் சேர்த்து தேர்ச்சி அடையச் செய்து சாதித்து காட்டி இருப்பதாகவும், பின்தங்கியிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை கல்வியில் முன்னேற்ற இருப்பதாகவும் அதை பின்னுக்கு செல்ல விடமாட்டோம் என்றும் தெரிவித்தார்.
தனியார் பள்ளியில் நிராகரிக்கப்பட்ட மாணவர்கள் அரசு பள்ளிகளில் சாதனை! அதே பள்ளியில் 451 பெற்று முதலிடம் பிடித்த மாணவி ஜீவலட்சுமி கூறியதாவது, தங்கள் பள்ளியில் ஆசிரியர்களின் முயற்சியாலும் மாணவர்கள் ஒத்துழைப்பே இந்த தேர்ச்சி விகிதத்தை தங்களால் காட்ட முடிந்தது. தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளேமாணவர்களை கனிவுடன் கவனித்துக் கொள்வதாகவும் அரசுப் பள்ளிகளே சிறந்து விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.