தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரம் காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்! - ramnad police

ராமநாதபுரம்: ராமநாதபுரம் காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு அம்மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

ராமநாதபுரம்  காவல் துறை
ராமநாதபுரம் காவல் துறை

By

Published : Feb 24, 2021, 9:23 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது வழக்குப்பதிவு செய்ய ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டார்.

ராமநாதபுரம் காவல் துறை

இதையடுத்து, காவல் துறையினர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களிடமிருந்து மதுபாட்டில்கள், கஞ்சா, குட்கா, புகையிலைப் பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், போக்சோ, பிற வழக்குகளில் குற்றவாளிகள் தண்டனை பெறுவதற்காக, காவலர்கள் சிறப்பாக பணிபுரிந்தனர்.

இந்நிலையில், இன்று (பிப். 24) மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், சிறப்பாக பணிபுரிந்த காவல் துறை அலுவலர்கள், காவலர்களின் பணியை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details