ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆணிமுத்து, வேட்பு மனுவை தேர்தல் அலுவலர் செந்தில் முருகனிடம் தாக்கல் செய்தார்.
ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக, திமுக, அமமுக வேட்புமனு தாக்கல் - Ramnad DMK
ராமநாதபுரம்: திருவாடானை, ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி
இதேபோல் அமமுக வேட்பாளர் முனியசாமி சார் ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சுகப்புத்ராவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பரமக்குடி அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரன் நேற்று (மார்ச் 17) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திமுக முதுகுளத்தூர் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜகண்ணப்பன் தனது வேட்பு மனுவை முதுகுளத்தூர் வட்டாட்சியரிடம் தாக்கல் செய்தார்.