தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகன் கைது - காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய தாய்! - காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய தாய்

கஞ்சாவுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மகனை விடுவிக்க கோரி காவல் நிலையத்தில் பொருட்களை அடித்து நொறுக்கிய தாயை கேணிக்கரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Ramanadhapuram ganza seized issue
Ramanadhapuram ganza seized issue

By

Published : Jul 3, 2021, 4:47 PM IST

ராமநாதபுரம் : கேணிக்கரை காவல் துறையினர் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் மகர் நோன்பு பொட்டல் பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் ராஜா (24), ஆர்எஸ் மடை பகுதியை சேர்ந்த குமார்(24)ஆகிய இருவரையும் காவல் துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 1200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து இருவரையும் காவல் துறையினர் கேணிக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது இதுபற்றி தகவலறிந்த வின்சென்ட் ராஜாவின் தாய் அந்தோணியம்மாள் காவல் நிலையத்திற்கு சென்று தனது மகனை விடுவிக்குமாறு கூறி அங்கிருந்த காவல் துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும், காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு காவல் நிலையத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் கேணிக்கரை காவல் நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து காவல் துறையினர் அந்தோணியம்மாளை கைது செய்து ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

மேலும் கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக வின்சென்ட் ராஜா,முவீன்குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details