ராமநாதபுரத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நேற்றுவரை இரண்டாயிரத்து 956 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகள், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் 3 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு! - இன்று ஒரே நாளில் மூன்று பேர் பலி
ராமநாதபுரம்: மாவட்டத்தில் இன்று கரோனா வைரஸ் பாதிப்பு மூன்றாயிரத்தைக் கடந்தது. தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் இன்று உயிரிழந்தனர்.
![ராமநாதபுரத்தில் 3 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு! ramanadhapuram district crossed three thousand corona positive cases](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-06:58:45:1595770125-tn-rmd-01-corona-update-pic-script-7204441-26072020183822-2607f-1595768902-1036.jpg)
ramanadhapuram district crossed three thousand corona positive cases
மாவட்டத்தில் நேற்றுவரை 60 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், இன்று சூரங்கோட்டை, பாம்பன், பெரியப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இன்று புதிதாக 87 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ராமநாதபுரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 40ஆக அதிகரித்துள்ளது.