ராமநாதபுரம் மாவட்டம் வேந்தோணி கிராமத்தை சேர்ந்தவர் கணபதி. இவர் தனது நண்பர் பூதன் (60) மற்றும் குடும்பத்துடன் அறியகுடி புத்தூர் கிராமத்தில் தனது உறவினரின் இறப்புக்கு காரில் சென்றுள்ளனர்.
அப்போது கார் தபால் சாவடி செல்லும்போது அங்கு உள்ள வளைவில் ஓட்டுநர் பிரேக் அடித்துள்ளார்.
அப்போது, மழை பெய்து கொண்டிருந்தால் எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்தது. இதில், பூதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சம்பவயிடத்திற்கு வந்த சத்திரக்குடி காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:அரக்கோணம் இளைஞர்கள் படுகொலை - தமிழ்நாடு முழுவதும் விசிகவினர் கண்டன ஆர்பாட்டம்!