தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு - ராமநாதபுரம் மாவட்டச்செய்திகள்

ராமநாதபுரம்: உச்சிப்புளி அருகே இரு வாகனங்கள் நேற்று மாலை (ஏப். 25) நேருக்கு நேர் மோதிய விபத்தில் புதிதாக திருமணமானவர் உயிரிழந்தார்.

புதுமாப்பிள்ளை
புதுமாப்பிள்ளை

By

Published : Apr 26, 2021, 11:09 AM IST

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே கிணற்று வலசை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் கொத்தனார் வேலை செய்துவருகிறார்.

இவருக்கு மார்ச் 3ஆம் தேதி திருமணமான நிலையில் நேற்று மாலை (ஏப். 25) இருசக்கர வாகனத்தில் மரவெட்டிவலசை அருகே சென்றுகொண்டிருந்தபோது, நாகாட்சியைச் சேர்ந்த கணேசன் என்பவர் வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இதில், படுகாயமடைந்த சரவணகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து உச்சிப்புளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

திருமணமான இரண்டு மாதத்தில் புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details