தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை: பாம்பன் பாலத்தில் தீவிர சோதனை - பாம்பன் பாலத்தில் ரோந்து பணி

ராமநாதபுரம்: சீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை சென்னை வரவுள்ள நிலையில், பாம்பன் ரயில் பாலத்தில் ரயில்வே காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

pamban rail bridge

By

Published : Oct 10, 2019, 5:24 PM IST

Updated : Oct 11, 2019, 12:00 PM IST

இந்திய பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை முன்னிட்டு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டி அக். 11, 12 ஆகிய தேதிகளில் போக்குவரத்து வசதி மாற்றப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

பாம்பன் பாலத்தில் காவல் துறையினர் தீவிர சோதனை

மேலும், சென்னை விமான நிலையத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தமிழ்நாட்டு கலாசாரப்படி வரவேற்க பல்வேறு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இருநாட்டு தலைவர்களும் முக்கிய பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர். இதனால், தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலத்தில் ரயில்வே காவல் துறையினர் சோதனை நடத்தினர். இலங்கைக்கு அருகாமையில் ராமேஸ்வரம் இருப்பதால், கடல் மார்க்கமாக ஊடுருவலைத் தடுக்க சர்வதேச கடல் எல்லை வரை இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையினர் ரோந்து பணியிலும், பாம்பன் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ராமேஸ்வரத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றது.

Last Updated : Oct 11, 2019, 12:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details