ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று மாலை ராமேஸ்வரம் பகுதியில் பலத்த சூறைக் காற்று வீசியது.
பலத்த காற்று காரணமாக பாம்பனில் ரயில் சேவை பாதிப்பு
ராமேஸ்வரம்: பலத்த காற்று காரணமாக பாம்பனில் சேது விரைவு ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
Rail service disrupted in Pampanga due to strong winds
இதையடுத்து நேற்று இரவு 8:15 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்ல இருந்த சேது விரைவு ரயில் பாம்பன் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பாம்பன் பாலத்தில் காற்றின் வேகம் குறைந்தால் மட்டுமே பாம்பன் தூக்கு பாலத்தில் ரயில் இயக்கப்படும் என்பதால் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு பின், ரயில் சேவை துவங்கப்பட்டது. இதனால் சேது விரைவு ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
Last Updated : Aug 2, 2019, 6:35 AM IST