தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் ஓட்டம்பிடித்த ராதிகா சரத்குமார்! - Radhika Sarathkumar election campaign

ராமநாதபுரம்: பொதுக்கூட்டத்திற்கு மக்கள் யாரும் வராததால் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்யவந்த நடிகை ராதிகா சரத்குமார் அங்கிருந்து வாகனத்தில் கிளம்பினார்.

Election2021 SMK Radhika Sarathkumar  ராதிகா தேர்தல் பரப்புரை  நடிகை ராதிகா  சமக  மநீம  ராமநாதபுரத்தில் ராதிகா தேர்தல் பரப்புரை  Radhika Sarathkumar election campaign  Radhika Sarathkumar election campaign in Ramanathapuram
Election2021 SMK Radhika Sarathkumar

By

Published : Mar 27, 2021, 2:10 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் மநீம கூட்டணியில் போட்டியிடும் சமக வேட்பாளர் நவ. பன்னீர்செல்வத்தை ஆதரித்து நடிகை ராதிகா சாயல்குடியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக மூக்கையூர், கடலாடி ஆகிய பகுதிகளில் பரப்புரை முடித்துவிட்டு சாயல்குடி வருவதற்கு சற்று காலதாமதமானது.

இந்நிலையில், ராதிகா சாயல்குடி வருவதற்கு இரவு 9 மணிக்கு மேல் ஆனதால், பொதுக்கூட்டத்திற்குப் பொதுமக்கள் யாரும் வராத நிலையில் கட்சித் தொண்டர்கள் மகளிர் நான்கு பேர் மட்டுமே கையில் கட்சிக் கொடியோடு நின்றுகொண்டிருந்தனர்.

இதனால் பரப்புரை வேனில் வேட்பாளர் நவ. பன்னீர்செல்வம் மட்டும் தலையைக் காட்டியபடி, ராதிகா வந்த வாகனம் அந்த இடத்தில் நிற்காமல் கிளம்பிச் சென்றது. மேளம் அடிக்கும் வாகனம் அவர்கள் சென்ற பரப்புரை வாகனத்தைத் தேடியது.

பரப்புரை வாகனத்தை நிறுத்தாமல் செல்லும் ராதிகா சரத்குமார்

வேறு இடத்தில் எங்காவது பேசுகிறாரா எனப் பாதுகாப்புக்கு வந்த காவல் துறையினர் சாயல்குடி பேருந்து நிலையம் வரை தேடிச் சென்ற நிலையில் ராதிகா வாகனம் கடலாடி கூட செல்லாமல் கமுதி நோக்கிச் சென்றது. அங்கு முத்து மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதையும் படிங்க:’சினிமா பட போஸ்டர்கள் போன்றது திமுக அதிமுகவின் இலவச அறிவிப்புகள்'

ABOUT THE AUTHOR

...view details