ராமநாதபுத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை தாக்கம் அதிதீவிரமாக உள்ளது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. தொற்றால் இறந்தவர்களின் உடல்கள் அதிகளவில் ராமநாதபுரம் அருகே உள்ள அல்லிக்கண்மாய் மயானத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த மின்மயானத்தில், காலை முதல் இரவு வரை இறந்தவர்களின் உடல்களுக்கு தொடர்ந்து இறுதிசடங்கு செய்யப்பட்டு வருகிறன. சடலங்களை எரியூட்டும் போது, சில நேரங்களில் இயந்திரக் கோளாறு போன்றவற்றால் தாமதம் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.