தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சரைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் கொட்டும் மழையில் குடை பிடித்து போராட்டம்! - ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

ராமநாதபுரம்: தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றத்தில் தங்களைச் சேர்த்தற்காக முதலமைச்சரைக் கண்டித்து பட்டங்கட்டி கடையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest to condemn the Chief Minister
முதலமைச்சரை கண்டித்து போராட்டம்

By

Published : Dec 7, 2020, 5:07 PM IST

அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏழு சாதிகளின் உள்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிப்பை பரிந்துரை செய்துள்ளார்.

அந்த உள்பிரிவில் இணைக்கப்பட்டிருக்கும், பட்டங்கட்டி கடையர் சமுதாயம் தங்களுக்கு விருப்பமில்லை என்றும், தங்களது அனுமதி இன்றி, எதுவும் கேட்காமல் தங்களது சமுதாயத்தை தேவேந்திர குல வேளாளர் பிரிவில் இணைத்ததைக் கண்டித்து உடனடியாக அதைத் திரும்பப் பெற வேண்டி அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று (டிச. 07) ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொட்டும் மழையில் குடைபிடித்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலமைச்சரைக் கண்டித்து போராட்டம்

ஆர்ப்பாட்டத்தின்போது முதலமைச்சருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். மேலும் முதலமைச்சர் உடனடியாக அறிவிப்பைத் திரும்பப் பெறாவிட்டால் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலை தங்களது சமுதாயம் புறக்கணிக்கும். அனைவரின் வாக்காளர் அடையாள அட்டையையும் திருப்பித் தருவோம் என அச்சமுதாயத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் ஆனந்த் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆந்திராவில் புதிய வகை நோயால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட்ட முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details