ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகாவிற்குட்பட்ட கொழுந்துரை, ஆர்.காரைக்குடி ஆகிய இரண்டு கிராமங்களிலும் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவ்விரு கிராமங்களிலும் மூன்று ஆண்டுகளாக குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் உள்ளவர்கள் சுமார் இரண்டு கி.மீ தூரம் நடந்து செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து கொழுந்துரை, ஆர்.காரைக்குடி கிராம மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் பலனில்லை.
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி கிராமமக்கள் நூதனப் போராட்டம்..! - water crisis
ராமநாதபுரம்: குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் நுதனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியேறும் போராட்டம்
இதனால் விரக்தியடைந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மூட்டை மூடிச்சுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறினர். பின்னர் தகவலறிந்து வந்த அரசு அலுவலர்கள் குடிநீர் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்ததையடுத்து கலைந்துச் சென்றனர்.
கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறிய சம்பவம் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.