தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒன்றிய அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்! - ஒன்றிய அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து, அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று (ஏப்.5) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்கள் வேலைநிறுத்தம்
மீனவர்கள் வேலைநிறுத்தம்

By

Published : Apr 5, 2022, 4:15 PM IST

ராமநாதபுரம்: கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீனவர்கள் 16 பேர், ஒரு வாரத்திற்கு முன்பு ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் என இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். கடந்த மார்ச் 30ஆம் தேதி ஜெகதாபட்டினம் மீனவர்கள் 3 பேர் மற்றும் சிலர், ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குள் சென்றபோது, 12 பேர் கடந்த 2ஆம் தேதி இரவு சிறைபிடிக்கப்பட்டனர். கடந்த 10 நாட்களில் மட்டும் தமிழ்நாடு மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக் கோரி வேலைநிறுத்தம்

அதுமட்டுமில்லாமல், மீனவர்களின் 5 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து மீனவர்கள் சங்க கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும் பறிமுதல் செய்த படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் ஒன்றிய அரசை வலியுறுத்தியும் மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரையில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: இலங்கையிலிருந்து 15 தமிழ்நாடு மீனவர்கள் நாடு திரும்பினர்

ABOUT THE AUTHOR

...view details