தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமேஸ்வரம் மகா சிவராத்திரி நிகழ்ச்சிகள்! - Rameswaram Temple

ராமேஸ்வரம்: மகா சிவராத்திரி நிகழ்ச்சிகள் நாளை வரை (மார்ச் 12) நடைபெறும் எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராமேஸ்வரம் கோயில்
ராமேஸ்வரம் கோயில்

By

Published : Mar 11, 2021, 6:26 AM IST

பிரளய காலத்தில் பிரம்மனும், அவரால் உருவாக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்டன. இதனால் பார்வதி தேவி சிவப்பிரானை நினைத்து இரவு முழுவதும் பூஜை செய்தார். இரவு முழுவதும் சிவனை நினைத்து பூஜை செய்ததால் அந்த ராத்திரி சிவராத்திரி என அழைக்கப்பட்டது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்தத் திருவிழாவின் ஆறாவது நாளான நேற்றிரவு (மார்ச்9) 8 மணிக்கு மேல் அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வரும்நிகழ்ச்சி நடைபெற்றது.

மகா சிவராத்திரியின் நிகழ்ச்சித் தொகுப்பு
இந்நிலையில் 7ஆவது நாளான நேற்று (மார்ச்10) மாலை 4 மணிக்கு அம்பாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (மார்ச் 11) மகா சிவராத்திரி நடைபெறும். அன்றைய தினம் இரவு 9 மணிக்கு அம்பாள் வெள்ளித்தேரில் வலம்வருவார்.
பின்னர் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோயில் நடையானது பகல், இரவு முழுவதும் திறக்கப்பட்டு, மறுநாள் (மார்ச் 12) மதியம் 1 மணிக்கு சாத்தப்படும் எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேரோட்டம்
மேலும் மார்ச் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. சிவராத்திரி, தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) தனபால் தலைமையில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், சூப்பிரண்டுகள் ககாரின்ராஜ், பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கலைச்செல்வன், கமலநாதன், செல்லம், காசாளர் ராமநாதன், கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details