ராமநாதபுரம்:ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இம்மருத்துவ முறைக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 150 தனியார் மருத்துவமனைகள், 350 சிகிச்சை மையங்களை(clinic) மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் கலப்பு மருத்துவ முறைக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு!
மத்திய அரசு அறிவித்துள்ள ஒரே நாடு ஒரே மருத்துவ முறைக்கு ராமநாதபுரம் மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களை மூடி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் கலப்பு மருத்துவ முறைக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு
இருப்பினும், அவசர சிகிச்சை, கோவிட்- 19, தெரிவு செய்யப்பட்ட சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்படுவதாக இந்திய மருத்துவக் கழகம் ராமநாதபுரம் கிளை தலைவர் டி. அரவிந்தராஜ், கௌரவச் செயலாளர் ஆனந்த சொக்கலிங்கம் ஆகியோர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கன்னியாகுமரியில் மருத்துவர்கள் போராட்டம்!