ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. கரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல தன்னார்வ அமைப்புகளும், பொது மக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
காவலர்களுக்கு கபசுர குடிநீர் பாக்கெட், முகக்கவசங்கள் வழங்கல்!
பரமக்குடியில் தனியார் அறக்கட்டளை சார்பில் காவல்துறையினருக்கு 10 ஆயிரம் முகக் கவசங்கள், 2,500 கபசுரக் குடிநீர் பாக்கெட் இலவசமாகக் கொடுக்கப்பட்டது.
அதேபோல், பரமக்குடி தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளை சார்பில் பரமக்குடி நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஜெய்சிங் தலைமையில், பரமக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் வேல்முருகன் முன்னிலையில் காவல்துறையினருக்கு கபசுர குடிநீர் பாக்கெட், முகக்கவசங்களை அதன் நிறுவனர் முகமது அலி ஜின்னா வழங்கினார். இந்நிகழ்வில் காவல்துறையினருக்கு 10 ஆயிரம் முகக்கவசங்கள், 2,500 கபசுர குடிநீர் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: '10 லட்சம் ரூபாய் வழங்கிய அசுரன்; வனமகனும் சளைத்தவர் அல்ல'